பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்தப்படும் பிள்ளைகள்: அதிரவைக்கும் புதிய தகவல்
பல்வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வந்து அங்கிருந்து ஆட்கடத்தல்காரர்களால் பிரித்தானியாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவது உலகமறிந்த செய்திதான்.
இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்தப்படும் புலம்பெயர்வோர் குறித்து அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சுக்கு கடத்தப்படும் பிள்ளைகள்
ஐந்து வயதேயான குழந்தைகள் முதல் பலரை லொறிகளின் பின்பக்கத்தில் அடைத்து பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்தும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
அந்த கும்பலின் தலைவனான அல்ஜீரியாவைச் சேர்ந்த Azize Benaniba (41) என்பவரும் அவரது கூட்டாளிகளும் வட ஆப்பிரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் பிரெஞ்சு மொழி பேசும் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து லொறிகள் மூலம் பிரான்சுக்கு கடத்திவந்துள்ளனர்.
NCA
பிரெஞ்சு எல்லையில் Calaisஇல் லொறி ஒன்றை சோதனையிட்ட பிரான்ஸ் பொலிசார், அந்த லொறிக்குள் 58 புலம்பெயர்வோர் இருந்ததைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த உண்மை தெரியவந்துள்ளது.
Azize லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு Isleworth க்ரௌன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கூட்டாளிகளுக்கும் 7ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |