எட்டு மாதத்தில் 2,000 புலம்பெயர் மக்களை காவுகொண்ட கடல்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலி மற்றும் மால்டாவிற்கு மத்திய மத்திய தரைக்கடல் பாதையை பயன்படுத்த முடிவு செய்த புலம்பெயர் மக்கள் 2,000 பேர்கள் இதுவரை மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்
கடந்த இரண்டு நாட்களாக மத்தியதரைக் கடலில் தத்தளித்த 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஓஷன் வைக்கிங் என்ற மீட்புக் கப்பல் காப்பாற்றியுள்ளது. இத்தாலிய தீவுக்கும் துனிசியாவிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் லம்பேடுசாவின் தென்மேற்கே மீட்புப் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@reuters
மேலும், துனிசியா மற்றும் லம்பேடுசா தீவுக்கு நடுவே தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மத்தியதரைக் கடல் என்பது புலம்பெயர்ந்தோருக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான கடல் வழி என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மிக மோசமான சம்பவங்களில் ஒன்று
மேலும், வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலி மற்றும் மால்டாவிற்கு மத்திய மத்திய தரைக்கடல் பாதையில் இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 1,848 பேர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
@reuters
2022ல் இந்த எண்ணிக்கையானது 1,417 என்றே இருந்துள்ளது. ஜூன மாதத்தில் புலம்பெயர் மக்களின் படகு ஒன்று கவிழ்ந்ததில், மொத்தமாக 82 பேர்கள் பலியாகினர். இப்பகுதியில் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான சம்பவங்களில் ஒன்று இதுவென கூறுகின்றனர்.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |