புதினால் சிறையில் இறந்து கொண்டிருக்கிறேன், என்னை காப்பாற்றுங்கள்! ஜார்ஜியா ஜனாதிபதி மைக்கேல் சாகாஷ்விலி
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதினால் தான் சிறையில் இறந்து கொண்டிருப்பதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் அமெரிக்காவிடம் ஜார்ஜியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறையில் சித்திரவதை
ஜார்ஜியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான மைக்கேல் சாகாஷ்விலி(Mikheil Saakashvili) மீது அதிகார துஷ்பிரயோக வழக்குப் போடப்பட்டது. அதன் பின் அவர் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
@ap
இதனிடையே அவர் அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரது உதவியுடன் ஜார்ஜியா அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஜார்ஜியாவின் தற்போதைய ஆளும் கட்சி ரஷ்யாவிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கிறது என கூறியுள்ளார்.
@afp
மேலும் அவர் ஜார்ஜியன் சிறையில் இறந்து கொண்டு இருக்கிறேன். உடல் மற்றும் மனரீதியாக சிறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிடம் கோரிக்கை
'எனது உடலில் அதிக உலோக விஷம் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன, நான் 20 நோய்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளேன்.
இந்த நோய்கள் அனைத்தும் சிறையிலிருந்தபோது வந்தவை, சிறையில் அடைக்கப்பட்ட பின்பு எனது உடல் மிக மோசமாக பாதித்துள்ளது' என மைக்கேல் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் ஜார்ஜியாவின் அதிபராக மைக்கேல் இருந்தபோது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அந்நாடு ஈடுபட்டது.
போரைத் தொடங்கியதற்காக அப்போது, மைக்கேலை அவரது அந்தரங்க உறுப்புகளை கொண்டு தூக்கில் போட வேண்டும் என ரஷிய ஜனாதிபதி புதின் அதிரடி மிரட்டல் விடுத்த விடயங்களையும் குறிப்பிட்டு உள்ளார்.
மைக்கேல், தற்போது தனது இந்த நிலைமைக்கு நிச்சயம் புதினே பொறுப்பு ஆவார் எனக் கூறியுள்ளார். ரஷிய உளவாளிகள் ஜார்ஜியன் பாதுகாப்பு சேவைக்குள் ஊடுருவி தனக்கு விஷம் வைத்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து, ஜார்ஜிய அரசுக்கு தூதரக அளவிலான நெருக்கடி கொடுத்து தனது உயிரை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.