கால்வாய்க்குள் கவிழ்ந்த சிற்றுந்து! 21 பேர் பலியான சோகம்
எகிப்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளான சிற்றுந்து
கால்வாய்க்குள் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகினர்
எகிப்தில் சிற்றுந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
எகிப்தின் வடக்கு மாகாணமான நைல் டெல்டாவில் சிற்றுந்து ஒன்று 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்தது. குறித்த சிற்றுந்து டஹாலியா மாகாணம் அஹா நகரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Twitter
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்பணி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது துரதிர்ஷ்டவசமாக 21 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.
Getty
மேலும் படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Khaled DESOUKI / AFP