பாகிஸ்தானுடன் மோத வேண்டிய நிலை இதனால்தான் ஏற்பட்டது! இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவதற்கான காரணத்தை, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுப்படுத்தினார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணம்
இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம், உக்ரைனுக்கு எதிராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா தொடர்ந்து போர்புரிந்து வரும் சூழலில், இந்தியா அதனிடம் இருந்து எரிபொருள் வாங்குவது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த போதிலும் சில நாடுகள் இன்னும் எரிபொருள் வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்றுதான் இந்தியாவும் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குகிறது. அந்நாடுகள் எரிபொருள் விலையை அதிகரிக்க செய்கின்றன. இது இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.
பாகிஸ்தானுடன் மோதல்
பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "அண்டை நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட பயங்கரவாதிகள், அந்நாட்டின் அதிக பாதுகாப்பிற்கான ஆதரவுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், சில நாட்களாக அவர்களுடன் நாங்கள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த மோதலை ஒப்பந்தம் மூலம் இராணுவ வடிவில் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டோம். துப்பாக்கிச்சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என ஒப்பந்தம் மற்றும் புரிதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் இராணுவங்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காணப்பட்டது" என தெரிவித்தார்.
மேலும் அவர், உலகளவில் உள்ள பாரிய சவால்கள் என நாம் பார்க்கும்போது, முக்கிய சவால்களில் ஒன்றாக பயங்கரவாத செயல்களை நான் முன்வைப்பேன். அது ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |