மேலாடை இல்லாமல் புகைப்படம்: மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டியாளர்களிடம் அத்துமீறல்
இந்தோனேசியா மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்களை மேலாடை இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள் குற்றச்சாட்டு
இந்தோனேசிய அழகி தேர்வுக்கான போட்டி ஜகார்டாவில்(Jakarta) ஜூலை மாதம் 29ல் தொடங்கி ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியாளர்கள் 6 பேர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சார்பாக உள்ள வழக்கறிஞர் மெல்லிசா ஆங்ரேனி தெரிவித்துள்ள புகாரில், ஆண்கள் உட்பட 20 பேர் வரை இருக்கும் அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் போட்டியாளர்களை மேலாடை இல்லாமல் நிற்க சொல்லி அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளாடைகளை களைய சொல்லியும், தங்களுக்கு சங்கடம் தரும் வகையில் நிற்க சொல்லியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட போட்டியாளர்கள் 6 பேர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ் நிர்வாகம் விசாரணை
இந்நிலையில் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியாளர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உற்று நோக்கி வருவதாகவும் விசாரணை நடத்தப்படும் என்றும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களுடைய முதல் குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |