உக்ரைன் தலைநகரில் பரபரப்பான சாலையில் விழுந்த ஏவுகணை: மயிரிழையில் தப்பிய கார்கள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில், பரபரப்பான சாலை ஒன்றில், ஏவுகணை ஒன்று வந்து விழுவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட புடின்
திங்கட்கிழமையன்று, ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது தீவிர ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது. உக்ரைன் மீது 11 ஏவுகணைகளை ஏவுமாறு புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
Credit: Reuters
காலை 11.00 மணியளவில் துவங்கி அந்த தாக்குதலில் வீசப்பட்ட 11 ஏவுகணைகளையும் தாங்கள் இடைமறித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் கூறியிருந்தது.
மயிரிழையில் தப்பிய கார்கள்
இந்நிலையில், ரஷ்ய ஏவுகணை ஒன்று சாலையில் வந்து விழும் காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கார் ஒன்றின் டேஷ்கேம் கமெராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், 11.22 மணியளவில், வானிலிருந்து ஏவுகணை ஒன்று சாலையில் வந்து விழுவதைக் காணலாம்.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், அந்த ஏவுகணை தங்கள் மீது விழுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளன.
அத்துடன், அந்த ஏவுகணை வெடிக்கவும் இல்லை. ஆகவே, யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அது உக்ரைனால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பாகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Credit: Reuters
இன்னொரு பக்கம், தினமும் இப்படி தாக்குதல்களைப் பார்த்து பழகிவிட்டதாலோ என்னவோ, ஏவுகணை விழுந்தும் யாரும் எந்த பரபரப்பையும் காட்டாமல், ஆளாளுக்கு தங்கள் கார்களை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து செல்வதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
Credit: Reuters