ரஷ்ய ஜனாதிபதி புடின் மாயம்: 24 மணி நேரமாக வெளியே தலைகாட்டவில்லை என தகவல்
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய விடயம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்னர் குழுவின் தலைவர் மாயம்
இந்நிலையில், வாக்னர் குழுவின் தலைவரான Yevgeny Prigozhin மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமைக்குப் பின் Prigozhin வெளியே தலைகாட்டவில்லை என்றும், எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Credit: Reuters
ஒரு காலத்தில் புடினுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட Prigozhin இப்போது புடினுக்கு எதிராக திரும்பியுள்ளதைத் தொடர்ந்து அவர் கொல்லப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Credit: AP
புடின் துரோகிகளை மன்னிக்கமாட்டார் என கூறப்படும் நிலையில், Prigozhin உயிருக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
புடின் மாயம்
அதேபோல, கடந்த 24 மணி நேரமாக புடினும் வெளியில் தலைகாட்டவில்லை என கூறப்படுகிறது. அவர் தனது ரகசிய, குண்டு துளைக்காத அறைக்குள் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
Credit: Reuters
வாக்னர் தலைவர் Prigozhin துரோகம் செய்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று தொலைக்காட்சியில் தோன்றி புடின் பேசும் காட்சிகள் வெளியாகின என்றாலும், அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேட்டி என கூறப்படுகிறது.
Credit: AP
இத்தனை ஆண்டுகால புடினுடைய ஆட்சியில் இவ்வளவு பெரிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததில்லை என கூறப்படும் நிலையில், புடினும் Prigozhinம் மாயமாகியுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |