மாயமான மலேசிய விமானம்... நகைச்சுவை பேசிய பெண்: இரு நாடுகளுக்கு இடையே மூண்ட பகை
அமெரிக்காவில் பெண் நகைச்சுவையாளர் ஒருவர் மாயமான மலேசிய விமானம் தொடர்பில் கேலியாக பேச, தற்போது அந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பகையை உருவாக்கியுள்ளது.
மலேசிய விமான தொடர்பில் கிண்டல்
அமெரிக்காவை சேர்ந்த பெண் நகைச்சுவையாளர் Joselyn Chia என்பவரே, மாயமான மலேசிய விமான தொடர்பில் கிண்டல் செய்ததாக கூறி விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டவர்.
@getty
மலேசியா நாட்டை பொதுவெளியில் இகழ்ந்ததாகவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், இணைய பக்கத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் கூறி Joselyn Chia மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மலேசிய நிர்வாகம்.
மட்டுமின்றி, Joselyn Chia-வை கைது செய்யும் பொருட்டு மலேசிய காவல் துறை இன்டர்போலின் உதவியை நாடும் எனவும் அதன் தலைவர் Acryl Sani Abdullah Sani தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையே பகை
உண்மையில் Joselyn Chia சிங்கப்பூர் நாட்டவர் என்றும், தற்போது அவர் அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும், மாயமான மலேசிய விமானம் தொடர்பில் அவர் நகைச்சுவையாக கிண்டலடித்த காணொளி பெரும் கவனத்தை ஈர்க்க, தற்போது இந்த விவகாரம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே பகையை தூண்டியுள்ளது.
@getty
1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றதை குறிப்பிட்ட Joselyn Chia, மலேசியா உண்மையில் சிங்கப்பூரை புறந்தள்ளியது என்றார். ஆனால் அதன் பின்னர் சிங்கப்பூர் உச்சம் பெற்றதாகவும் முதல் நிலை நாடுகள் வரிசையில் தற்போது சிங்கப்பூர் உள்ளது எனவும், மலேசியா தற்போதும் வளரும் நாடுகள் பட்டியலில் தான் இருக்கிறது எனவும் பேசியுள்ளார்.
மட்டுமின்றி, மலேசிய மக்கள் சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு செல்வதில்லை எனவும், அதற்கு காரணம் அங்குள்ள விமானங்கள் பறப்பதில்லை எனவும் வெளிப்படையாக கேலி செய்துள்ளார்.
ரடாரில் இருந்து மாயமானது
மலேசிய விமானம் மாயமானதை குறிப்பிட்டே அவர் அவ்வாறு பேசியுள்ளார் என்றே மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2014ல் MH370 என்ற மலேசிய விமானம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் புறப்பட்டு, இந்தியப் பெருங்கடலின் ஒருபகுதியில் வைத்து ரடாரில் இருந்து மாயமானது.
அந்த விமானம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், நகைச்சுவையாளரான Joselyn Chia-ன் கேலி இரு நாட்டு நிர்வாகத்தினரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
@getty
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், Joselyn Chia சிங்கப்பூர் மக்களுக்காக அவர் பேசவில்லை எனவும்,
மலேசியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான எங்கள் உறவுகளை நாங்கள் பொக்கிஷமாக கருதுகிறோம், மேலும் அனைத்து மலேசியர்களையும் புண்படுத்தியதற்காக வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |