மிஸ்ஸிசிப்பில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 உயிரிழப்பு: இளைஞர் கைது
அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு
வெள்ளிக்கிழமை மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் உள்ள க்ளே கவுண்டியில்(Clay County) பகுதியில் நடந்த அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

3 வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்
வெஸ்ட் பாண்ட் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 3 வெவ்வேறு இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மூன்று வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவம் தொடர்பில் 24 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
JUST IN: Police charge 24-year-old Daricka Moore as suspect in deadly West Point, Mississippi shooting that left 6 dead pic.twitter.com/kZhcFs1218
— zamohappy (@zamohappy) January 10, 2026
உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் இளைஞரின் தாக்குதலுக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ காரணங்கள் வெளியாகவில்லை.
மேலும் கைது செய்யப்பட்ட நபரால் இனி பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று க்ளே கவுண்டி ஷெரீப் எடி ஸ்காட் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |