ஒன்பது பெண்களை மணந்து ஒரே வீட்டில் குடித்தனம்! நான்கு மனைவிகளை விவாகரத்து செய்யவுள்ள காரணம்
பிரேசிலை சேர்ந்த நபர் 9 பெண்களை மணந்து உலகளவில் வைரலான நிலையில் தற்போது 4 மனைவிகளை விவாகரத்து செய்யவுள்ளார்.
9 திருமணங்கள்
Arthur O. Urso என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் 9 திருமணம் செய்ததன் மூலம் வைரலானார். அதுவும் தனது முதல் மனைவியின் முன்னணியில் வைத்து எட்டு பேரை கரம்பிடித்திருந்தார் உர்சோ.
தற்போது அவர் தனது 9 மனைவிகளில் நான்கு பேரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதில் ஏற்கனவே மனைவிகளில் ஒருவரை பிரிந்துவிட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேர் அவரை பிரியவுள்ளனர்.
Photo Credit: Jam Press Source: UGC Read
வருங்காலத்தில் மேலும் திருமணம்
இந்த விவாகரத்து முடிவுக்கு அவர் சொல்லியிருக்கும் காரணம், எல்லோரிடமும் சீரான உறவை தொடரமுடியவில்லை என்பது தான்..! Arthur கூறுகையில், நான் இப்போது விவாகரத்து பற்றி பேசுவதற்கு காரணம், சமூக அழுத்தம் தான். நான் இன்னும் வருங்காலத்தில் பல திருமணங்கள் செய்துகொள்ளவே ஆசைப்படுகிறேன்.
என் வாழ்வில் ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. ஆனால் என் வாழ்வில் இன்னும் பல பெண்கள் வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன் என்றார்.
Arthurவுக்கு அவரது ஒன்லிஃபேன்ஸ் என்ற சமூகவலைதளம் மூலம் மட்டும், ஒவ்வொரு மாதமும் 50,000 யூரோக்கள் கிடைக்கிறது. இதோடு சமூகவலைதளங்களில் முழுக்க முழுக்க தன் மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் ஃபோட்டோக்களுமே போட்டுள்ள Arthur, அவ்வபோது பாலியல் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
Jam Press/CO Press Office