மோடி 7 முறை தமிழகத்திற்கு வந்தும்.., பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக முன்னிலையில் இல்லை.
பாஜக நிலவரம்
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில், ஒரு தொகுதியில் கூட பாஜக முன்னிலை வகிக்கவில்லை.
இன்று காலை 8 முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார்.
பின்னர், நேரம் போக போக காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். தற்போது, இருவருக்கும் இடையே 50 ஆயிரத்திற்கு மேல் இருந்ததால் பூத்தை விட்டு நயினார் நாகேந்திரன் வெளியேறினார்.
அதேபோல, கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம், வடசென்னையில் பால் கனகராஜ், விருதுநகரில் ராதிகா, கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பின்னடைவில் உள்ளனர்.
இதற்கிடையில், பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களில் 10 முறை தமிழகத்திற்கு வந்துவிட்டார். கடந்த ஏப்ரல் 10 -ம் திகதி ரோடு ஷோ நடத்துவதற்கு சென்னைக்கு வந்திருந்தார்.
இதில், எத்தனை முறை மோடி தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக வெல்லாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால், தமிழகத்திற்கு பலமுறை மோடி வந்தும் கூட ஒரு தொகுதியில் பாஜக வெல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பேசப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |