பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை பரிசளித்த மோடி! பின்னர் அவர் சொன்ன விடயம்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை இந்திய பிரதர் நரேந்திர மோடி பரிசளித்தார்.
பில் கேட்ஸ் உடன் உரையாடல்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (bill Gates) உடன் AI முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமர் மோடி உரையாடினார்.
இந்த உரையாடல் முடிவில் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பரிசளித்தார்.அதற்கு பதிலாக பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்கினார்.
அதாவது, உள்நாட்டிலேயே தயாரிக்கும் "Vocal for Local" என்பதை வலியுறுத்தும் வகையில் பரிசுபொருள்கள் இருந்தது.
தூத்துக்குடி முத்து
அந்த பரிசுப்பொருட்களில் ஒன்று தான் தூத்துக்குடி முத்து. அப்போது பிரதமர் மோடி, "தமிழகத்தில் உள்ள ஒரு நகரம் தான் தூத்துக்குடி. இந்த நகரம் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது. மேலும், அங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.
#WATCH | After their interaction, Bill Gates presents a few nutrition books to PM Modi as gifts.
— ANI (@ANI) March 29, 2024
PM Modi gifts him 'Vocal for Local' gift hampers. pic.twitter.com/JYGj10BzU1
மேலும் இந்த உரையாடலின் போது, "AI (Artificial intelligence) மிகவும் முக்கியமானது. எங்களது நாட்டில் தாயாரை ஏய் (Aai) என்று அழைப்போம். அதேபோல AI குழந்தைகள் முன்னேறி விட்டனர் என்று தற்போது சொல்வேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |