அதானிக்கு Blank check கொடுத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி: ராகுல் காந்தி ஆவேசம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.
அதானிக்கு பிளாங்க் செக்
இந்திய தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இந்திய பிரதமர் நரேந்திர மோடி அத்தானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய குடிமக்களின் வருமானமும் அதானிக்கு பங்காக சென்று கொண்டிருக்கிறது.
அதற்கு, பிரதமர் மோடி துணை நின்று கொண்டிருக்கிறார். அதானி குழுமத்தின் நிலக்கரி முறைகேட்டால் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
நிலக்கரியில் முறைகேடு
மேலும் பேசிய அவர், "இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி இந்தியாவில் பலமடங்காக அதானி குழுமம் விற்பனை செய்கிறது. அவர்களை பிரதமர் பாதுகாப்பதால் தான் இவை நடக்கின்றன. இது குறித்து பிரதமர் இன்னும் வாய் திறக்கவில்லை.
இதன் பின்னணியில் இருக்கும் முறைகேடுகளை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மக்களின் நம்பகத்தன்மையை இழந்து கொண்டு வருகிறார். இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் ரூ.12 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.
இதன் பின்னால் அதானி இருக்கிறார் என்பதை லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது" என்று கூறினார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |