துபாயில் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த இந்திய வம்சாவளியினர்
உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துபாயில் மோடி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர், நேற்று இரவு துபாய்க்கு சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி ஹொட்டலுக்கு செல்லும் வழி மற்றும் வெளியிலும், துபாயில் வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, "மோடி மோடி, பாரத் மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம்" என்ற முழக்கமிட்டும், கைகளில் இந்திய கொடிகளை ஏந்தியும் அமோக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இதனிடையே, இந்த உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |