405 பேரின் உயிரை பறித்த நிலச்சரிவு.., வயநாட்டிற்கு மோடி செல்வது எந்த நாளில்?
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 405 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 405-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களை கேரளா முதலமைச்சர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளோட்டர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மோடி வயநாடு பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் வயநாட்டிற்கு செல்லவுள்ளார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாட்டிற்கு சென்று பறந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தெரிகிறது. இந்த பயணத்தில் அவருடன் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இருப்பார் கூறப்படுகிறது.
பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் வயநாடு மாவட்டம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |