போர்க்களத்தில் தீர்வை கண்டறிய முடியாது! ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து மோடி கூறிய விடயம்
ஆஸ்திரியா ஜனாதிபதியை சந்தித்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரியாவுக்கு பயணம்
ரஷ்யாவில் தனது பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டார்.
அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சான்சலர் கார்ல் நெஹாமர் உடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் வியன்னாவில் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி ரஷ்யா, உக்ரைன் போரை குறிப்பிட்டு பேசினார்.
பிரதமர் மோடி பேச்சு
அவர் கூறுகையில், ''நான் இதற்கு முன்பே கூறியிருக்கிறேன். இது போருக்கான நேரம் அல்ல. விவகாரங்களுக்கான ஒரு தீர்வை நாம் போர்க்களத்தில் இருந்து கண்டறிய முடியாது. ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது'' என்றார்.

மேலும் பேசிய அவர், ''இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்துகிறது. அதற்கு எந்தவித தேவையான ஆதரவையும் வழங்க நாங்கள் இருவரும் ஒன்றாக தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்தார்.
அதேபோல் சான்ஸலர் கூறும்போது, சர்வதேச உறவுகளுக்கான அரசியல் சூழலில், வளர்ச்சிக்கான விடயங்களே இரு நாடுகளையும் இணைத்துள்ளன என்றார்.
ஆஸ்திரியாவுக்கு 40 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் ஒருவர் (நரேந்திர மோடி) சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |