இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம்: மாற்றுப்பாதையில் கனடாவிற்கு செல்லும் பிரதமர் மோடி
ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசிய வானில் பதற்றம் அதிகரித்து வருவதனால் மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர் பதற்றம் தீவிரம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு ஆசிய வான்பரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இது விமானங்கள் பறப்பதற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், விமானப் பயணங்களில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய விமான நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. முக்கிய பிரமுகர்கள் உட்பட பல விமானங்கள் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பயணம்
இந்த சூழலில் கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாடு மற்றும் சைப்ரஸ், குரோஷியா நாடுகளில் நடைபெறும் பிற இருதரப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஏர் இந்தியா-1 விமானம் புறப்பட உள்ளது.
வானிலை பதற்றம் காரணமாக அவரது விமான பயணம் வழக்கத்தை விட நீண்டதாக இருக்கும். அதாவது, கனடாவில் உள்ள Kananaskisஐ அடைவதற்கு முன்பு, ஏர் இந்தியா-1 விமானமானது சைப்ரஸில் உள்ள லார்னாக்காவில் தரையிறங்கும்.
எப்போது சைப்ரஸிற்கு விமனப்பாதையானது பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் வழியாகத்தான் இருக்கும்.
ஆனால் பதற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்தப் பாதையானது மூடப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் போன்ற மாற்று வழிகள் கூட பிராந்திய மோதல்களில் சிக்கியுள்ளன.
அத்துடன் பாகிஸ்தானின் வான்வெளி கூட இந்திய விமானங்களுக்கு (ஆபரேஷன் சிந்தூருக்கு பின்) வரம்பற்றதாக உள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
எனவே, பிரதமர் மோடியின் விமானம் உட்பட VIPகளின் விமானங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
டெல்லியில் இருந்து லார்னாக்காவிற்கு செல்லும் பயணம், பொதுவாக 8-9 மணிநேரம் ஆகும். இது பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுப்பாதைகளில் செல்வதனால் பயண நேரம் இன்னும் நீடிக்கும்.
லார்னாக்காவில் தரையிறங்கும் பிரதமர் மோடியின் விமானம், சைப்ரஸில் 24 மணிநேரம் செலவிட்டு சூன் 16ஆம் திகதி அன்று கனடாவுக்கு புறப்படும். இதன்மூலம் ரஷ்யா - உக்ரைன் போர் மண்டலத்தை பிரதமர் தவிர்ப்பார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |