நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால்...! இஸ்லாமிய இளைஞரின் காணொளி
பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் நரேந்திர மோடி ஆட்சி செய்து இருக்கலாம் என அவரது விருப்பத்தை தெரிவித்துள்ள வீடியோ ஒன்று சமூவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரிஃப் ஆட்சி குறித்து அந்நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பி அதனை விடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.
இதில் ஒரு இஸ்ஸாமிய இளைஞரே இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
காணொளியில் கூறியதாவது,
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், அத்தியாவசியப் பொருள்களை நேர்மையான விலைக்கு வாங்கி எங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன்.
தக்காளியை கிலோ 20 ரூபாய்க்கும், கோழிக்கறியை கிலோ 150 ரூபாய்க்கும் வாங்கியிருப்பேன்.
பாகிஸ்தான் நாடு இஸ்லாமிய நாடாக நிலைத்துவிட்டது. ஆனால், இஸ்லாம்தான் இங்கு முழுமையாக நிலைக்கவில்லை.
பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பிடும்போது நரேந்திர மோடியின் ஆட்சி சிறந்தது. ஏனெனில் அந்நாட்டு மக்கள் அவரை மதிக்கின்றனர். பின்பற்றுகின்றனர். அவர் பாகிஸ்தானுக்கும் கிடைத்திருந்தால், அனைத்து பிரச்னைகளையும் கையாண்டிருப்பார்.
"Hamen Modi Mil Jaye bus, Na hamen Nawaz Sharif Chahiye, Na Imran, Na Benazir chahiye, General Musharraf bhi nahi chahiye"
— Meenakshi Joshi ( मीनाक्षी जोशी ) (@IMinakshiJoshi) February 23, 2023
Ek Pakistani ki Khwahish ? pic.twitter.com/Wbogbet2KF
அப்படி அவர் கிடைத்தால், நமக்கு செபாஷ் செரீஃப், பெனாசீர், இம்ரான், ஏன் முஷாரஃப் கூடத் தேவையில்லை.
உலக அளவில் இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த பலர் அவரது கருத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.