அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி: 15 முறை எழுந்து நின்று கைதட்டிய எம்.பிக்கள்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய பிரதமர் என்ற பெமைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார் பிரதமர் மோடி.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மோடி, தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசிவருகிறார்.
எலான் மஸ்க்குடன் சந்திப்பு, ஜோ பைடன்- ஜில் பைடன் விருந்து என பலவற்றை குறிப்பிடலாம்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், அமெரிக்க காங்கிரசில் இரண்டு முறை உரையாற்றுவது பாக்கியம், இதற்காக 1.4 மில்லியன் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, அதை ஊக்குவித்து ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இந்தியா- அமெரிக்காவின் உறவு சிறப்பாக இருந்தது, ஆனால் அதிக உயரத்துக்கு எடுத்துச்சென்ற பெருமை எங்கள் தலைமுறையினருக்கு உண்டு.
இது ஒரு பெரிய நோக்கத்திற்கான சேவை என்பதால், இதனை வரையறுக்கும் கூட்டாண்மை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
இந்தியாவும், அமெரிக்காவும் பலவற்றில் இணைந்து செயல்படுகின்றன, நவீன இந்தியாவில் பெண்களால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
பழங்குடியின பின்னணியில் இருந்து வந்த பெண் இந்தியாவில் மிக உயர்ந்த பதவியை வகிக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, 22 அதிகாரப்பூர்வ மொழிகளும் உண்டு.
ஆனால் நாங்கள் ஒரே குடும்பம் என்ற குரலில் மட்டுமே பேசுகிறோம், நான் பிரதமராகி முதன்முறையாக அமெரிக்கா வந்த போது, உலகின் 10வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தது.
தற்போது 5வது நாடாக முன்னேறியிருக்கிறது, இந்தியாவின் முன்னேற்றம் என்றால் அது உலகுக்கும் தான் என்றார்.
பிரதமரின் உரையின் போது 15 முறை அமெரிக்க எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர், உரைக்கு பின்னரும் பலர் செல்பி எடுத்துக் கொண்டது நினைவுக்கூரத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |