முடிவுக்கு வரும் வரி விதிப்பு? டிரம்ப்பை சந்திக்க உள்ள பிரதமர் மோடி
வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக டிரம்ப்பை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் வரி விதிப்பு
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இந்தியா அதிகளவில் வாங்கி வரும் நிலையில், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் 80வது பொதுச்சபை கூட்டம் தொடங்க உள்ளது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
டிரம்ப் மோடி சந்திப்பு
இதில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, செப்டம்பர் 26 ஆம் திகதி உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்கா டிரம்ப் உரையாற்ற உள்ளார்.
இந்த அமெரிக்கா பயணத்தின் போது, டிரம்ப்பை சந்தித்து வரி விதிப்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |