ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே வைத்துள்ள நாடு - என்ன காரணம்?
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில் பயணம் செய்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக நாடு முழுவதும் 7,349 ரயில் நிலையங்கள் உள்ளது.
ஆனால், ஐரோப்பிய நாடு ஒன்றில், மொத்த நாட்டிற்கு ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.
ஒரு ரயில் நிலையம் மட்டுமே வைத்துள்ள நாடு
ஐரோப்பிய நாடான மொனாக்கோவில், நாட்டிற்கு மொத்தமாகவே மொனாக்கோ-மான்டே-கார்லோ என்ற ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.
1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், நிலத்தடியின் 43 அடி ஆழத்தில், 1,529 அடி நீளம் மற்றும் 72 அடி அகலத்தில் உள்ளது.
இந்த ரயில் நிலையம், நாளொன்றுக்கு 20 முதல் 30 ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையம், பிரான்ஸின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
என்ன காரணம்?
மொனாக்கோவானது, வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது சிறிய நாடாக உள்ளது.
2.03 சதுர கிலோ மீட்டர் மற்றும் 40,000 மட்டுமே மக்கள் தொகை உள்ள நாட்டிற்கு இந்த ஒரு ரயில் நிலையமே, பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது.
இந்த நாட்டில், உள்ள மூன்றில் ஒருவர் மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் ரூ8.81 கோடி) அதிகமாக சொத்து வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |