185 பயணிகள் சென்ற தீப்பிடித்த விமானத்தை சாதுரியமாக தரையிறக்கிய பெண் விமானி!
இந்தியாவில் நடுவானில் விமானம் தீப்பிடித்த நிலையில், அதனை புத்திசாலித்தனமாக தரையிறக்கி 185 பயணிகளின் உயிரை பெண் விமானி ஒருவர் காப்பாற்றியுள்ளார் .
பாட்னாவிலிருந்து நேற்று டெல்லிக்கு 185 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு எஞ்சின் மீது பறவை ஒன்று மோதியதால் தீப்பிடித்தது.
பல நிமிடங்கள் காற்றில் பறந்த அந்த விமானம், பிறகு பாட்னா விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால், இப்படி ஒரு சூழலில் பதற்றப்படாமல் பல உயிர்களை பத்திரமாக தரையிறக்கிய பெருமை பெண் விமானி ஒருவரைச் சேரும்.
ஆம், பறவை மோதியதால் தீப்பிடித்து பழுதடைந்த ஒரு எஞ்சினை முற்றிலுமாக அணைத்துவிட்டு, புத்திசாலித்தனமாக செயல்பட்டு யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் தரையிறங்கியது கேப்டன் மோனிகா கண்ணா எனும் பெண் விமானி தான்.
இதையும் படிங்க: அந்தரத்தில் கேபிள் காரில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்; மீட்பு பணி தீவிரம்
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர், காயம் ஏதும் ஏற்படவில்லை என்று பாட்னா காவல்துறையின் மூத்த காவல் கண்காணிப்பாளர் மானவ்ஜித் சிங் தில்லான் தெரிவித்தார். அவரது விரைவான நடவடிக்கையை ஸ்பைஸ்ஜெட்டின் விமான நடவடிக்கைகளின் தலைவர் குர்சரண் அரோரா பாராட்டினார்.
“கேப்டன் மோனிகா கண்ணா மற்றும் முதல் அதிகாரி பல்பிரீத் சிங் பாட்டியா (பைலட்-இன்-கமாண்டாக) ஆகியோர் சம்பவத்தின் போது சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் முழுவதும் அமைதியாக இருந்து விமானத்தை நன்றாக கையாண்டனர். அவர்கள் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள், நாங்கள் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” என்று அரோரா ஊடகங்களில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஷ்ய கோடீஸ்வரரின் சொகுசுப் படகை கைப்பற்றிய அமெரிக்கா!
யார் இந்த மோனிகா கண்ணா?
மோனிகா கன்னா ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் நிறுவனத்தில் உயர் தகுதி பெற்ற விமானி ஆவார். அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தின்படி, மோனிகா பயணம் செய்ய விரும்புகிறார் மற்றும் சமீபத்திய ஃபேஷன் மற்றும் ட்ரெண்டுகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
கேப்டன் மோனிகா கண்ணா அவசரகால சூழ்நிலையில் விரைவாகவும் சரியாகவும் செயல்பட்டதற்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமானம் அதிக எடையுடன் தரையிறங்கும்போது எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்பது இந்த சாதனையை மேலும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது.
#WATCH Patna-Delhi SpiceJet flight safely lands at Patna airport after catching fire mid-air, all 185 passengers safe#Bihar pic.twitter.com/vpnoXXxv3m
— ANI (@ANI) June 19, 2022
Fire incident of Spice Jet flight yesterday...#SG723
— Col. Abhay Rishi ( Veteran) (@AbhayRishi28) June 20, 2022
Well done Capt of the aircraft! ??‼️ pic.twitter.com/EiqccTlw02
இதையும் படிங்க: 117 நாட்களாக தொடரும் உக்ரைன் போர்., 33,800 வீரர்களை இழந்த ரஷ்யா!