மதுபான கடையில் வெடித்த சண்டை: துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 12 உயிரிழப்பு
மாண்டினீக்ரோவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
12 பேர் உயிரிழப்பு
மேற்கு மாண்டினீக்ரோவில்(Montenegro) செட்டின்ஜே(Cetinje) நகரில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மதுபான விடுதியில் தொடங்கிய இந்த சம்பவம் பின்னர் கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவமாக மாறியது.
45 வயதான அலெக்சாண்டர் மார்டினோவிக்(Aleksandar Martinovic) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், மதுபான கடையின் உரிமையாளர், அவரது குழந்தைகள் மற்றும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் என பலரை கொடூரமாக கொலை செய்து இருப்பதாக உள்துறை அமைச்சர் டானிலோ சரனோவிக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரை மாய்த்துக் கொண்ட தாக்குதல்தாரி
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, அலெக்சாண்டர் மார்டினோவிக் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினார்.
இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை சிறப்பு காவல்துறை பிரிவு குழுவினர் அனுப்பப்பட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தலைநகர் போட்கோரிகா(capital Podgorica) வடமேற்கே 18 மைல் தொலைவில் செடின்ஜே-வில் உள்ள தனது வீட்டின் வாசலில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |