ஒரு மாதப் போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எத்தனை பில்லியன்? வெளியான தகவல்
ஒரு மாதப் பேரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது 38வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா படைகள், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பட்லர் சதம்.. மும்பையை ஊதி தள்ளி 2வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்!
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் மரியுபோல் நகரம் முழுவதும் சிதைந்து கிடக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளளது.
Mariupol pic.twitter.com/xIfHpRanp2
— Oleda (@Adda___Oleda) April 2, 2022
இதனிடையே, உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை அண்டை நாடான பெலாரஸில் சந்தை அமைத்து, ரஷ்ய ராணுவம் விற்பனை செய்து வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு மாதப் போரில் உக்ரைனுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவையின் பொருளாதார குழுவுடனான சந்திப்பில் இந்த மதிப்பீடு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.