நாட்டு மக்களுக்கு மகிழ்வான செய்தியை அறிவித்த பிரதமர்: ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இது முதல் முறை
தொடர்ச்சியான ஓய்வூதியம் மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
1.5 மில்லியன் ஓய்வூதியம் பெறும் மக்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும்
கிரேக்கத்தில் அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் என பிரதமர் Kyriakos Mitsotakis சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டு மீண்டும் உயரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாடு நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் முதல் முறையாக ஓய்வூதியங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
@reuters
தொடர்ச்சியான ஓய்வூதியம் மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஈடாக 2010 மற்றும் 2015 க்கு இடையில் 260 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான சர்வதேச கடன்களைப் பெற்றுள்ளது கிரேக்கம்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர், நாட்டில் உள்ள 1.5 மில்லியன் ஓய்வூதியம் பெறும் மக்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
2023ல் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 713 யூரோக்களாக உயர்த்திய குறைந்தபட்ச ஊதியமானது மே மாதத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் என்றார்.
@reuters
மட்டுமின்றி, பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ஒற்றுமை வரியை அவரது அரசாங்கம் ரத்து செய்யும் எனவும் பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவித்துள்ளார்.
மேலும், விலைவாசி உயர்வு எரிசக்தி கட்டண உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளை சமாளிக்க போதுமான நிதியுதவியை அளிக்க இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் கிரீஸ் சுமார் 8 பில்லியன் யூரோக்கள் மின் கட்டண மானியங்கள் மற்றும் பிற நிவாரண நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே செலவிட்டுள்ளது.
மட்டுமின்றி, குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கு டிசம்பர் மாதம் தலா 250 யூரோ அளிக்கப்படும் எனவும் Kyriakos Mitsotakis தெரிவித்துள்ளார்.