கத்தாரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மொராக்கோ விமானங்கள் ரத்தானதால் FIFA உலகக் கோப்பை ரசிகர்கள் ஏமாற்றம்
FIFA உலகக் கோப்பை 2022: கத்தார் கட்டுப்பாடுகளைக் கூறி மொராக்கோ விமான நிறுவனம் உலகக் கோப்பை ரசிகர் விமானங்களை ரத்து செய்தது.
கத்தாரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
உலகக் கோப்பை அரையிறுதிக்கு தோஹாவுக்கு ரசிகர்களை பறக்கச் செய்வதற்காக புதன்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக மொராக்கோவின் தேசிய விமான நிறுவனம் அறிவித்தது, இது கத்தார் அதிகாரிகளின் முடிவு என்று கூறியது.
இது குறித்து விமான நிறுவனம் மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட அறிக்கையில், "கத்தார் அதிகாரிகளால் விதிக்கப்பட்ட சமீபத்திய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் மூலம் இயக்கப்படும் தங்கள் விமானங்களை ரத்துசெய்தது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ராயல் ஏர் மரோக் வருத்தம் தெரிவிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
Getty Images,Reuters
இன்று (புதன்கிழமை) இரவு நடக்கும் பிரான்சுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மொராக்கோ ஆதரவாளர்கள் கத்தாருக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், Royal Air Maroc 30 கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்த போதிலும், செவ்வாயன்று 14 விமானங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாக Royal Air Maroc டிராவல் ஏஜென்சியின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று திட்டமிடப்பட்ட ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், செவ்வாய்கிழமை ஏழு விமானங்களை மட்டுமே Royal Air Maroc இயக்க முடிந்தது. இதனால் ஏற்கனவே போட்டி டிக்கெட்டுகள் அல்லது ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேநேரம், Royal Air Maroc விமான டிக்கெட்டுகளை திருப்பித் தருவதாகக் கூறியதுடன், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டது.