உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் முடங்கிய முக்கிய விமான நிலையங்கள்: தரையில் தூங்கிய ரஷ்ய பயணிகள்
ரஷ்யா மீதான பாரிய ட்ரோன் தாக்குதல்களால் முக்கிய விமான நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டது.
முக்கிய விமான நிலையங்கள்
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் மாஸ்கோவிற்கு சேவை செய்யும் முக்கிய விமான நிலையங்களால் குழப்பத்தை ஏற்படுத்தின.
அதாவது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின என ரஷ்யா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் வரிசையில் காத்திருந்தனர் அல்லது தரையில் தூங்கினர் என கூறப்படுள்ளது.
ரஷ்யாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான Sheremetyevoயின் தரையில் மக்கள் தூங்குவதையும், நீண்ட வரிசையில் காத்திருந்ததும் ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்களில் தெரிய வந்துள்ளது.
பல ஆயிரம் பேர்
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், "முந்தைய நாள் மாஸ்கோ பிராந்தியத்தில் 30 உட்பட 172 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பின்னர், மாஸ்கோ பிராந்தியத்தில் 30 உட்பட 117 ட்ரோன்களையும் இரவு முழுவதும் சுட்டு வீழ்த்தப்பட்டன" என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய ரஷ்யாவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ரஷ்யாவின் தூர கிழக்கில் பல ஆயிரம் பேர் சிக்கித் தவித்தனர்.
அதே சமயம், வடக்கு ரஷ்ய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மாஸ்கோவிற்கு பயணிகளை மீண்டும் அழைத்து வர கூடுதல் ரயில்கள் நிறுத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |