உலகின் வலிமையான இராணுவ சக்தி கொண்ட நாடு எது? பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் வலிமையான இராணுவ சக்தி கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதல் இடம்.
உலகளாவிய பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் தரவு இணையதளமான குளோபல் ஃபயர்பவர், உலகின் சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நான்காம் இடத்தில் இந்தியா
பட்டியலின் படி, அமெரிக்கா உலகின் வலிமையான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
AFP
உலகிலேயே பலவீனமான ராணுவப் படைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பூடான் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை அடங்கும்.
60க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் ராணுவ பலம் மதிப்பிடப்படுகிறது. இராணுவ வலிமை மற்றும் பொருளாதார நிலை முதல் தளவாடத் திறன்கள் மற்றும் புவியியல் இருப்பிடம் வரையிலான காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
Reuters
உலகின் வலிமையான படைகளைக் கொண்ட 10 நாடுகள்:
- அமெரிக்கா
- ரஷ்யா
- சீனா
- இந்தியா
- பிரித்தானியா
- தென் கொரியா
- பாகிஸ்தான்
- ஜப்பான்
- பிரான்ஸ்
- இத்தாலி
Reuters
உலகில் பலவீனமான இராணுவங்களைக் கொண்ட 10 நாடுகள்:
- பூட்டான்
- பெனின்
- மால்டோவா
- சோமாலியா
- லைபீரியா
- சுரினாம்
- பெலிஸ்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு
- ஐஸ்லாந்து
- சியரா லியோன்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |