மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை... அடுத்த அதிரடிக்கு தயாராகும் வடகொரியாவின் கிம் ஜோங் உன்
இதுவரையான ஏவுகணை வரிசையில் மிகவும் சக்திவாய்ந்தது என கூறப்படும் ஏவுகணை ஒன்றை வடகொரியாவின் கிம் ஜோங் உன் சோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்களை தயார் நிலையில்
அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சியானது முன்னெடுக்கப்பட இருக்கிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமது பலம் என கருதும் நீண்ட தூர ஏவுகணைகள் உட்பட பல வகையான ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.
@AP
மட்டுமின்றி, நாட்டின் 75வது ஆண்டு விழா செப்டம்பர் 9ம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கும் நிலையில், உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவவும் தயாராகி வருகின்றனர்.
உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல்
மே மாதம் உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இதனிடையே, வடகொரியா வசமிருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என பல தரப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
@AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |