ஏழு முறை மாரடைப்பு... அந்த ஒரு சம்பவத்தால் சிறுவன் ஒருவனுக்கு ஏற்பட்ட துயரம்: நொறுங்கிய குடும்பம்
திடீரென்று சிறுவனின் கால் சிவப்பு நிறமாக மாறியதுடன், வலி மேலும் அதிகரிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான்.
தென் அமெரிக்காவிலேயே விஷம் மிகுந்த மஞ்சள் தேள், உயிர் தப்புவது கடினம் என்பதையும் தெரிந்துகொண்டனர்.
உலகிலேயே விஷம் மிகுந்த தேள்களில் ஒன்று கொட்டியதால் பாதிப்புக்குள்ளான சிறுவன் 7 முறை மாரடைப்பு ஏற்பட்டு, இறுதியில் மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் சாவ் பாலோ மாகாணத்தை சேர்ந்த Luiz Miguel என்ற 7 வயது சிறுவன் அக்டோபர் 23ம் திகதி தமது பெற்றோருடன் விடுமுறையை கழிக்க தயாரான நிலையில், சிறுவனின் ஷூவுக்குள் பதுங்கியிருந்த தேள் ஒன்று கொட்டியுள்ளது.
Image: Newsflash
வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த சிறுவனை, என்ன நடந்தது என தெரியாமல் பெற்றோர் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் திடீரென்று சிறுவனின் கால் சிவப்பு நிறமாக மாறியதுடன், வலி மேலும் அதிகரிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான்.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட சிறுவனின் தாயார், தேள் கொட்டியிருக்கலாம் என்பதை புரிந்துகொண்டு, அது எந்தவகை தேள் என தெரிந்துகொள்ள முயன்றுள்ளார். இறுதியில், அது தென் அமெரிக்காவிலேயே விஷம் மிகுந்த மஞ்சள் தேள் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் தப்புவது கடினம் என்பதையும் தெரிந்துகொண்டனர்.
இதனிடையே, சிறுவனை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அன்றிரவு முழுவதும் சிறுவன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளான். இந்த நிலையில், சிறுவனின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட, அளித்துவந்த சிகிச்சையிலும் மாற்றம் செய்துள்ளனர்.
Image: Newsflash
தொடர்ந்து கண் விழித்த சிறுவன் தாயாரிடம் பேசவும் தொடங்கியுள்ளான். ஆனால் சில மணி நேரத்தில் எல்லாம் தலைகீழானது. சிறுவனுக்கு தொடர்ந்து 7 முறை மாரடைப்பு ஏற்பட, அக்டோபர் 25ம் திகதி சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளான்.
2022ல் மட்டும் இதுவரை 54 பேர்கள் குறித்த பகுதியில் மஞ்சள் தேள் கொட்டியதால் பாதிப்புக்கு உள்ளாகினர் என மாகாண நிர்வாகம் தரப்பில் கூறுகின்றனர்.
அங்குள்ள காலநிலை காரணமாகவே, மஞ்சள் தேள் அப்பகுதியில் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.