இளைஞரை உயிருடன் கொளுத்திய தாயார்.... அதிரவைத்த பின்னணி: நாடே திரண்டு ஆதரவு
சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த இளைஞரை தாயார் ஒருவர் உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துஸ்பிரயோகம் செய்த நபர்
குறித்த தாயாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்ட நிலையில், நாடே திரண்டு அவருக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், நீதிமன்றத்தையும் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்க வைத்தனர்.
ஸ்பெயின் நாட்டில் 1998ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. Maria Garcia என்பவருக்கு தமது மகளை துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் இருந்து விடுதலையானதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
வெறும் 13 வயதேயான வெரோனிகா தமது பக்கத்து வீட்டில் வசிக்கும் காஸ்மே என்பவரால் கத்தி முனையில் மிகக் கொடூரமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் காஸ்மே.
ஆனால் 2005 ஜூன் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், விடுதலையான அதே நாளில், பேருந்து நிறுத்தம் ஒன்றில் மரியா கார்சியாவை எதிர்கொண்ட காஸ்மே, கேலியும் கிண்டலுடன், மகள் எப்படி இருக்கிறார் என வம்பிழுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த மரியா கார்சியா, அதே நாள் மதுபான விடுதிக்குள் சென்று, அங்கு மது அருந்தியபடி இருந்த காஸ்மே மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொளுத்தியுள்ளார்.
இதில் 90 சதவிகிதம் காயங்களுடன் தப்பிய காஸ்மே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மரியா கார்சியா, தமக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்றும்,
அச்சுறுத்த வேண்டும், காயப்படுத்த வேண்டும், தமது மகள் அனுபவித்த துன்பத்தை அவனும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது என்றும் விளக்கமளித்துள்ளார்.
மக்கள் கார்சியாவுக்கு ஆதரவாக
ஆனால் நீதிமன்றம் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளதுடன் அவருக்கு 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீடு நீதிமன்றம் அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் என தண்டனையை குறைத்தது.
இருப்பினும், நாடு மொத்தம் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் மரியா கார்சியாவுக்கு ஆதரவாக திரண்டனர். ஆயிரக்கணக்கானோர் மரியா கார்சியாவுக்கு ஆதரவாக, அவரை விடுவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மட்டுமின்றி, ஈஸ்டர் பண்டிகையின் போது மன்னிப்பு வழங்கப்படும் கைதிகளின் பட்டியலில் மரியா கார்சியாவையும் உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
2011ல், ஓராண்டு மற்றும் 10 நாட்கள் தண்டனை அனுபவித்திருந்த நிலையில், நீதிமன்றம் அவரது தண்டனைக்கு தடை விதித்தது. ஆனால் 2013ல் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். பிராந்திய நீதிமன்றம் அவரது சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இருப்பினும் 2017ல் மரியா கார்சியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |