தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை.., அழுத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொலிஸ்
இந்திய மாநிலம் கேரளாவில், தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அழுத 4 மாத கைக்குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்க்கு சிகிச்சை
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில், கணவன், மனைவி, 13 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன், 4 வயதில் ஒரு மகள் மற்றும் 4 மாத கைக்குழந்தை உள்ளது.
இதில், வழக்கு ஒன்றில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேலும், மனைவி இதயக்கோளாறு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
தாய்ப்பால் கொடுத்த பெண் பொலிஸ்
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவருபவருடன் 4 குழந்தைகள் இருந்ததால், அவைகளை குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து செல்லுமாறு எர்ணாகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். உடனே, பெண் காவலர் ஆர்யா ஷைலஜன் உள்பட பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது, 4 மாத கைக்குழந்தை பசியால் அழுதது. அதை பார்த்த பெண் காவலர் ஆர்யா, குழந்தையை தனது மடியில் வைத்து தாய்ப்பால் கொடுத்தார்.
பின்னர், 4 குழந்தைகளையும் குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |