எம்எஸ் தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு., ரூ.15 கோடி இழப்பு.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் வர்த்தக கூட்டாளிகளான மிஹிர் திவாகர் (Mihir Diwakar) மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மகேந்திர சிங் தோனி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இவர்கள் இருவர் மீதும் தோனி ஏற்கனவே கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இருவரும் சேர்ந்து ரூ.15 கோடியை கொள்ளையடித்ததாக தோனியின் புகார்.
இந்நிலையில், இருவரும் தோனியிடம் இழப்பீடு கோரியுள்ளனர். இதனுடன், சமூக வலைதளங்களும், ஊடகங்களும் தங்களுக்கு எதிரான மோசமான செய்திகளை வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அகாடமி அமைப்பது என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக மிஹிர் மற்றும் சௌமியா மீது தோனி புகார் அளித்துள்ளார்.
Aarka Sports நிறுவனம் தோனியுடன் 2017ஆம் ஆண்டு உலகளாவிய கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இருப்பினும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க நிறுவனம் தயாராக இல்லை. நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டும், நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.
இறுதியாக, 15 ஆகஸ்ட் 2021 அன்று, ஆர்கா ஸ்போர்ட்ஸ் உடனான ஒப்பந்தத்தை தோனி ரத்து செய்தார்.
ஜேர்மனியில் சூர்யகுமார் யாதவிற்கு இடுப்பில் அறுவை சிகிச்சை வெற்றி., IPL, T-20 World Cupல் விளையாட சாத்தியம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ms dhoni defamation case, Aarka Sports, Delhi High Court, former Team India cricket captain Mahendra Singh Dhoni