முகேஷ் அம்பானி வாங்கிய சொகுசு காரின் விலை இத்தனை கோடியா? தீயாய் பரவும் தகவல்
பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் வாங்கிய கார் குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு கல்லினன் பெட்ரோல் ரக காரை அறிமுகம் செய்தது. அப்போது இந்த காரின் தொடக்கவிலை ரூ.7 கோடி ஆனால் தற்போது காலத்துக்கு ஏற்ப வசதிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்தால் ரூ.13.14 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர். அந்த வகையில் இவர் சமீபத்தில் லக்சரி காரான ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.
சந்தையில் ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் அதன் எஸ்யூவி காரினை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வது இல்லை. ஆனால் இதனை முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.
வெளிநாடுகளில் பெரும் பணக்காரர்கள் இந்த காரினை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் முகேஷ் அம்பானி வாங்கிய சொகுசு காரின் விலை ரூ.13.14 என்று இனியாயத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த கார் இந்தியாவிலேயே விலை உயர்ந்த காராக விளங்கி வருகின்றது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இரு லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 எஸ்யூவி கார்களையும் முகேஷ் அம்பானி தனது கேரஜில் சேர்த்திருந்தார். இதில் ஒன்று சில்வர் நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.