அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மருமகன் மற்றும் மருமகள்களான ஆனந்த் பிரமல், ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் கல்வி தகைமைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள்
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சண்டையுடன் வருகிற யூலை மாதம் திருமணம் நிகழவிருக்கிறது.
இந்த ஜோடியின் திருமண திகதி நெருங்கி வருவதால் அம்பானியின் மருமகன் மற்றும் மருமகளின் தனிப்பட்ட செய்திகள் தற்போது பேச்சுப்பொருளாகி வருகிறது.
ராதிகா, ஆகாஷ் அம்பானியை மணந்த ஷ்லோகா மேத்தா மற்றும் இஷா அம்பானியை மணந்த ஆனந்த் பிரமல் என்பவர்கள் பணக்கார குடும்பத்தில் இருந்தே வந்தவர்கள். இந்நிலையில் அவர்களின் கல்வி தகுதி குறித்து பார்க்கலாம்.
கல்வி தகுதி
ஆனந்த் பிரமல்
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஆனந்த் பிரமலை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
ஆனந்த் பிரமல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களான பிரமல் குழுமத்தின் நிறுவனராக இருக்கிறார். இவர் இந்தியாவின் கோடீஸ்வரரான அஷ்மல் பிரமலின் மகன் ஆவார்.
இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பாஸ்டனில் உள்ள Harvard Business School இல் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ஷ்லோகா மேத்தா
முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி ஷ்லோகாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
ஷ்லோகா மேத்தாவின் பெற்றோரான ரஸ்ஸல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோர் ரோஸி புளூ இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளனர்.
நியூஜெர்சியில் உள்ள Ivy League பல்கலைக்கழகமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் இளங்கலைப் படிப்பை முடித்து, லண்டனில் அரசியல் மற்றும் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட்
முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நிகழவிருக்கிறது.
இந்திய பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட்.
இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மருமகன் மற்றும் மருமகள்கள் தங்கள் குடும்பத் தொழில்களில் வெற்றிகரமாக இருப்பதற்காக கல்வியில் தங்களை நிலைநிறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |