“பலமுனை உலகிற்கு உறுதியளிக்கிறது” போருக்கு மத்தியில் ரஷ்யா சென்றுள்ள சீன தூதர் அறிவிப்பு
சீனாவும் ரஷ்யாவும் பலமுனை உலகை உறுதியளித்துள்ளது என சீன வெளியுறவு ஆணையத்தின் இயக்குநர் வாங் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பயணம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்னும் இரு தினங்களில் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், சீன மத்திய வெளியுறவு ஆணையத்தின் இயக்குநர் வாங் ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrovவை சந்தித்த சீன மத்திய வெளியுறவு ஆணையத்தின் இயக்குநர் வாங் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
????China and Russia remain strategically determined and committed to a multipolar world, Wang Yi said at a meeting with Lavrov. pic.twitter.com/oUeND8wzcU
— AZ ???? (@AZgeopolitics) February 22, 2023
சீனா ரஷ்யாவிற்கு இராணுவ உதவி வழங்க கூடும் எனவும், இதனால் பிரச்சனைகள் மோசமாகும் எனவும் அமெரிக்கா எச்சரித்து இருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பலமுனை உலகிற்கு உறுதி
இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய வாங், சீனாவும் ரஷ்யாவும் பலமுனை உலகிற்கு(multipolar world) உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான சந்திப்பின் போது புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Pool photo by Alexander Nemenov
பெய்ஜிங் சுயாதீன வெளியுறவுக் கொள்ளையை தொடரும் என்றும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்த கருத்தில், இரு நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து, ஐ.நா-வின் மைய கொள்கைப்படி ஒருவருக்கொருவர் நலன்களை பாதுகாக்க தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Twitter