மும்பையில் ஐஸ்கீரிம் வாங்கிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி - நடந்தது என்ன?
மும்பையில் பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கீரிமில் மனித விரல்
மும்பையில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
Yummo ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் இருந்து கோன் ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
அதை சாப்பிடும் போது தான், உள்ளே மனித விரல் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளார்.
உடனே அதை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன் பின்னர் மலாட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக Yummo நிறுவனம் மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |