விமானம் மூலம் முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தண்டனை முடிந்து விடுதலையான முருகன், லண்டன் செல்வதற்கு விசா எடுக்க அடையாள அட்டை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேருக்கும் இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு அனுமதி அளித்த நிலையில் முகாமில் இருந்த முருகன் உள்ளிட்ட மூவரும், காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர் இன்று காலை 10 மணியளவில் அவர்கள் அனைவரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |