இதுவரை 694 பேர் பலி! மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..விரையும் ரஷ்ய மீட்புப்படை
மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது.
7.7 ரிக்டர் நிலநடுக்கம்
ஆசிய நாடான மியான்மரில் நிலநடுக்கம் கோர தாண்டவம் ஆடியுள்ளது. அங்கு இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 144 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இரத்தத்தின் தேவை
அந்நாட்டு அரசு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரத்தத்தின் தேவை அதிகமாக இருப்பதாக கூறியது.
ஏற்கனவே இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் தங்கள் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளன.
அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
[28EVYM ]
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |