மியான்மரில் நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் திகிலூட்டும் வீடியோ வெளியீடு
மியான்மரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிக்கியவர்களின் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
திகிலூட்டும் வீடியோ
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிக்கியவர்களின் திகிலூட்டும் அனுபவத்தை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், காயமடைந்த அவர்களின் பாட்டியும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் அவலத்தை வெளிகாட்டியுள்ளது.
Video shows two teenaged girls and their grandmother trapped in a collapsed apartment in Myanmar after a 7.7 magnitude earthquake.
— Channel 4 News (@Channel4News) April 1, 2025
All three were later rescued. pic.twitter.com/nRAvYFTwBC
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஆறாவது மாடி குடியிருப்பிலிருந்து அவர்கள் தப்பிக்க முயன்றபோது இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
துக்கத்தில் மூழ்கிய தந்தை
இவர்கள் நிலநடுக்க அதிர்வுகளின் போது அவசரப் படிக்கட்டுகளுக்கு விரைந்த போது, திடீரென இடிந்த கட்டிடத்தின் சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து சோகத்தில் மூழ்கிய சிறுமிகளின் தந்தை, தனது மகள்களும் தாயும் இறந்துவிட்டதாக நினைத்துடன் மட்டுமல்லாமல் அவர்களின் உடல்களை மீட்க உதவி கோரி சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பி பிழைத்தது தெரியவந்த நிலையில், மீட்புக் குழுவினர் முதலில் சிறிய துளையிட்டு அவர்களுக்கு தண்ணீர் வழங்கியுள்ளனர்.
இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்க கூடுதல் உபகரணங்கள் தேவைப்படும் நிலையில், அதிகாரிகள் அவர்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |