வெளிநாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி இவரா? DNA பரிசோதனையில் உண்மை வெளியானது...
தான்தான் மாயமான பிரித்தானியச் சிறுமி என்று கூறிவந்த இளம்பெண்ணின் DNA பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா சென்றபோது பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர்
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
இந்நிலையில், போலந்து நாட்டவரான ஜூலியா (Julia Wendell, 21) என்ற இளம்பெண், தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தன் காலிலுள்ள ஒரு அடையாளமும், தன் கண்ணிலிருக்கும் ஒரு புள்ளியும், தான் மேட்லினாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் என்று கூறியிருந்தார் அவர்.
மேட்லினுடைய பெற்றோர் ஜூலியாவை DNA பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகின.
Image: Youtube/Dr Phil
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட DNA பரிசோதனை முடிவுகள்
ஜூலியா, தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து அவர் அதை உறுதி செய்ய DNA பரிசோதனை செய்துகொண்டிருந்தார்.
தற்போது அந்த DNA பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பரிசோதனையின் முடிவுகள், ஜூலியா, காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லின் அல்ல என்பதைக் காட்டியுள்ளன. மேலும், ஜூலியா பிரித்தானியரே அல்ல, அவர் லிதுவேனிய மற்றும் ரொமேனிய வம்சாவளியினரான போலந்து நாட்டவர் என அந்த பரிசோதனையின் முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜூலியாவுக்கு ஆதரவாக நின்று அவரது கூற்று உண்மைதானா என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டவரான, தனியார் துப்பறிவாளரும், ஆவிகளுடன் பேசுபவருமான Dr Fia Johansson, ஜூலியா 100 சதவிகிதம் போலந்து நாட்டவர் என்று கூறியுள்ளார்.
Image: Radar
எழுந்த விமர்சனம்
இதற்கிடையில், ஜூலியா பாடகராக விரும்பியதாகவும், அதற்காகவே தன்னை பிரபலமாக்கிக்கொள்வதற்காக, தான்தான் மேட்லின் என ஸ்டண்ட் அடித்ததாகவும் ஒரு செய்தி பரவியது.
இந்நிலையில், தான் எப்போதுமே ஒரு பாடகியாகவேண்டும், பிரபலமாகவேண்டும் என ஜூலியா விரும்பினார், அது தற்போது நிகழ்ந்துவிட்டது. அவரை இப்போது ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்று கூறியுள்ள Dr Fia, இன்னொரு பக்கம், ஜூலியா காணாமல் போன மேட்லின் இல்லை என்பது உறுதியாகியுள்ளதால், தன் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் ஜூலியாவின் முயற்சி வீணாகவில்லை, மேட்லினை தேடும் முயற்சி தொடர அது உதவியுள்ளது என்று கூறியுள்ளார்.
Image: Youtube/Dr Phil