இஸ்ரேலிலிருந்து வந்த மர்மத் தொலைபேசி அழைப்பு: காப்பாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
இஸ்ரேலிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் ஏராளமானோர் காப்பாற்றப்பட்டதாக பாலஸ்தீனர் ஒருவர் கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் இஸ்ரேல் உளவுத்துறையிலிருந்து பேசுகிறேன்...
காசாவில், கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு இடம் Al-Zahra. அங்கு வாழும் மஹ்மூத் (Mahmoud Shaheen, 40) என்பவருக்கு கடந்த மாதம் 19அம் திகதி முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மொபைலில் அவரை அழைத்த நபர், நீங்கள்தானே மஹ்மூத் ஷாஹீன் என்று கேட்டுள்ளார். நீங்கள் யார் என மஹ்மூத் கேட்க, தான் இஸ்ரேலிய உளவுத்துறையிலிருந்து பேசுவதாகக் கூறிய அந்த நபர், Al-Zahra பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடிக்குடியிருப்புகள் மீது குண்டு வீச இருப்பதாகவும், உடனடியாக அந்த குடியிருப்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லுமாறும் அந்த நபர் கூறியுள்ளார்.
உங்களை எப்படி நம்புவது என்று கேட்ட மஹ்மூத், எச்சரிக்கைக்காக வானை நோக்கி சுடுமாறு கேட்க, ட்ரோன் ஒன்று இலக்காக குறிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை நோக்கி குண்டு வீசியுள்ளது. இருமுறை உண்மையை உறுதி செய்துகொண்ட மஹ்மூத், உடனடியாக, அந்த கட்டிடங்கள் மற்றும் அவற்றின் அருகிலுள்ள கட்டிடங்களிலுள்ள மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளன.
QUTAIBA KOLTHOUM
இரண்டாவது அழைப்பு
அன்று மாலையே மஹ்மூதுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வர, ஆபத்தை உணர்ந்த அவர் மொபைலில் அழைத்த நபர் கூறியபடி பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற, மீண்டும் ஆறு கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளன.
அடுத்த முறை அழைத்த அதே நபர், இம்முறை 20 கட்டிடங்கள் தாக்கப்பட உள்ளதாகக் கூற, மக்களை மீட்க நேரம் கேட்டிருக்கிறார் மஹ்மூத். இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளதாக மொபைலில் அழைத்த நபர் கூற, இத்தனைபேரை எங்கே தங்கவைப்பது என்று மஹ்மூத் கேட்க, Al-Zahra பல்கலைக்கழக கட்டிடத்தில் தங்கவைக்கலாம் என பதில் வந்துள்ளது.
இப்படியே மொபைல் வாயிலாக அந்த நபர் மஹ்மூதிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பின்பே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சுமார் 20 கட்டிடங்கள் அதற்குப் பின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
எனது வீடு, எனது மருத்துவமனையைக் குறித்தெல்லாம் எனக்குக் கவலையில்லை என்று கூறும் மஹ்மூத், அவையெல்லாம் வெறும் உயிரற்ற பொருட்கள், நாம் உயிரோடிக்கிறோமே, அதுதானே முக்கியம் என்கிறார்.
எப்படியும், மஹ்மூதை மொபைலில் அழைத்த அந்த நபர்களும், மஹ்மூதுமாக, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
இஸ்ரேல் எப்போதுமே காசா மக்களை அழைத்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும், துண்டுப்பிரதிகள் மூலமாகவும் எச்சரிப்பது வழக்கம் என்று கூறப்படுவதுண்டு. அது உண்மைதான் என இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
QUTAIBA KOLTHOUM
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |