வெள்ளை மாளிகையின் மீது மர்ம பொருள் வீச்சு: விசாரணையில் தெரியவந்த உண்மை!
நேற்று அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வேலி மீது மர்மப் பொருள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.
ஜனாதிபதி டிரம்ப் பென்சில்வேனியாவில் ஒரு நிகழ்ச்சிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு வேலி மீது விழுந்த மர்ம பொருளைத் தொடர்ந்து, அந்தப் பகுதி உடனடியாகப் பாதுகாக்கப்பட்டு, அங்கு பணியில் இருந்த செய்தியாளர்கள் அனைவரும் உள்ளே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது.
விசாரணையில் அம்பலமான மர்மப் பொருள்
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் பின்னர் அளித்த விளக்கத்தில், விசாரணையில் அந்த "மர்மப் பொருள்" ஒரு செல்போன் என்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் செல்போனை வீசியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல், ஜனாதிபதி டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காதுப் பகுதியில் காயமடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் நிகழ்ந்துள்ளது.
தொடர்ச்சியான இந்த பாதுகாப்பு சிக்கல்கள் அமெரிக்காவில் பதட்டத்தை அதிகரித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |