'NAMO' APPல் உள்ள 'N' நமீதாவை குறிக்கும் - பாஜக கூட்டத்தில் நமீதா சர்ச்சை பேச்சு
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் 'NAMO' ஆப்பில் உள்ள 'N' ஆனது நமீதாவை குறிக்கும் என்று நடிகையும், பாஜக ஆதரவாளருமான நமீதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உளறிய நமீதா
சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்தில் நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், உங்கள் எல்லோரிடமும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் உள்ளன. அது நீங்கள் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பயன்படுத்துகிறீர்கள். அது போல தான் 'NAMO' ஆப்.
இந்த ஆப்பின் மூலம் தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய நாட்டில் என்ன வளர்ச்சி அடைந்து உள்ளதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அவர், 'NAMO' ஆப்-பில் இருக்கும் 'N' ஆனது நமீதாவை குறிக்கும். 'A' ஆனது அமிதாப்பச்சனை குறிக்கும் என்று கூட்டத்தில் பேசியுள்ளார். அது தான் 'NAMO' நரேந்திர மோடி ஜி ஆப் எனவும் கூறியுள்ளார்.
2 ஆப்-களை டவுன்லோடு செய்ய வேண்டும்
மேலும் பேசிய நமீதா, நீங்கள் இரண்டு ஆப்-களை டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் ஒன்று 'NAMO' ஆப், மற்றொன்று சாரல் ஆப். இந்த 2 ஆப்களையும் டவுன்லோடு செய்யுங்கள்.
இதன் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு ஆப்களும் முக்கியமான ஆப் எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |