கடுமையான வறட்சி... குடிமக்களுக்கு உணவளிக்க ஆனை உட்பட 700 விலங்குகளை கொல்லும் நாடு
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதற்காக யானைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகளை கொல்வதற்கு நமீபியா ஒப்புதல் அளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
நமீபியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
நமீபியாவில் பரவலாக அறிவிக்கப்பட்ட உணவு நெருக்கடியை அடுத்தே ஐ.நா இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, நமீபியாவின் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து, வறட்சி நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெட்டப்படும் 723 விலங்குகளின் இறைச்சியை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று திங்களன்று அறிவித்தது.
இதில், 30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 இம்பாலாக்கள், 100 நீல வனவிலங்குகள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் மற்றும் 100 எலண்ட் காளைகள் பயன்படுத்தப்பட உள்ளது.
பெருபாலும் தேசிய பூங்கா மற்றும் விலங்குகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பகுதியில் இருந்தே உணவாக்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெற்ற நபர்களையே வேட்டைக்கு உட்படுத்தப்படுகிறது. இதுவரை 157 விலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளது.
பேரழிவு நிலை
இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் சுமார் 68 மில்லியன் மக்கள் எல் நினோவினால் ஏற்படும் வறட்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடும் வறட்சி அப்பகுதி முழுவதும் பயிர்களை அழித்துவிட்டது.
2024 தொடக்கத்தில் தொடங்கிய வறட்சி, பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதித்து, உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதியை சேதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே, ஜாம்பியா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பசி நெருக்கடியை பேரழிவு நிலை என்று அறிவித்துள்ளன, அதே நேரத்தில் லெசோதோ மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் மனிதாபிமான ஆதரவைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |