அமெரிக்க ஜனாதிபதியின் பேத்தி நவோமி பைடனின் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூடு: தப்பியோடிய மர்ம நபர்கள்
அமெரிக்காவில் 3 மர்ம நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை உடைக்க முயற்சித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களின் பேத்தி நவோமி பைடனின் பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கி சூடு
3 மர்ம நபர்கள் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த காரை திருட முயன்று கொண்டு இருந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தியான நவோமி பைடனின்(Naomi Biden) பாதுகாப்பு காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என சட்ட அமலாக்கத்துறையினர் அசோசியேட் பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நவோமி பைடனுக்கு பாதுகாப்பாக ஜார்ஜ்டவுன் பகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், 3 மர்ம நபர்கள் ஆளில்லாத SUV காரின் கண்ணாடியை உடைப்பதை பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டை அரங்கேற்றியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
US President Joe Biden, first lady Jill Biden and granddaughter Naomi Biden(Reuters)
அதிகாரிகள் சம்பவத்தின் விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை, ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் சிவப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும், பாதுகாப்பு சேவைகள் உடனடியாக அவர்களை குறித்த தகவல்களை பொலிஸாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் ரகசிய சேவைகள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் கார் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.
IANS
வாஷிங்டனில் இந்த ஆண்டு 750க்கும் மேற்பட்ட கார் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது, இப்பகுதியில் மட்டும் 6000 க்கும் அதிகமான கார் திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |