பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க மறுத்த இத்தாலி - நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம்
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்கு, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போரில், 65,000 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம், காசாவில் இருந்து மக்களை வெளியேற்றி வருகிறது. உணவு இன்றி குழந்தைகள் பசியால் வாடுகின்றனர்.
இஸ்ரேல் இனஅழிப்பில் ஈடுபடுவதாக ஐ.நா சபை குற்றஞ்சாட்டியுள்ளது. போர் நிறுத்தம் செய்து, அமைதி வழியில் தீர்வு காண பல்வேறு நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இத்தாலியில் போராட்டம்
இதே போல், இத்தாலியும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி, இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது. நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
‘எல்லாவற்றையும் தடுப்போம்’ என்ற பெயரில் மிலன், ரோம் உள்ளிட்ட இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால், துறைமுக சேவை பாதிக்கப்பட்டது.
மிலனின் மத்திய ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் நுழைந்து தண்டவாளத்தை மறித்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
Milan central train station got ravaged by Antifa and pro-Palestinian rioters on Monday after Italy refused to acknowledge the State of Palestine.
— Viola Bergeron WILL NOT COMPLY!!!! (@StarSeed_2020) September 23, 2025
All the Left knows is violence. They all need to get serious jail time for this.
Make legal examples out of them. pic.twitter.com/rXwSONAy0Q
அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்ததில், போராட்டம் வன்முறையாக மாறி 60 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலோக்னாவில், 10,000 க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை முற்றுகையிட முயன்றனர்.கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.
Milano, dopo aver devastato la stazione Centrale, i compagni hanno inscenato una vera e propria guerriglia urbana in via Vittor Pisani.
— Francesca Totolo (@fratotolo2) September 22, 2025
In Italia, il problema è il fascismo vero?#scioperogenerale
https://t.co/C5reHfsdZz
இந்த வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, "சமாதானவாதிகள்' என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்ளும் நபர்கள், ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டு காவல்துறையுடன் மோதலில் ஈடுபடுகின்றனர்.
Indegne le immagini che arrivano da Milano: sedicenti “pro-pal”, sedicenti “antifa”, sedicenti “pacifisti” che devastano la stazione e generano scontri con le Forze dell’Ordine.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) September 22, 2025
Violenze e distruzioni che nulla hanno a che vedere con la solidarietà e che non cambieranno di una… pic.twitter.com/dpurnN5CBM
ஒற்றுமையுடன் எந்த தொடர்பும் இல்லாத இந்த வன்முறை, காசாவில் உள்ள மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், இத்தாலி மக்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |