டிரம்பிற்கு எதிராக கொந்தளித்த அமெரிக்கா: நாடு தழுவிய போராட்டத்தால் பரபரப்பு!
அமெரிக்க ஜனாதிபதிக்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டொனால்ட் டிரம்புக்கு எதிராக போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதிலும் உள்ள 50 மாகாணங்களில் சுமார் 12,000 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
❗️Thousands of people in the US have taken to the streets to protest against Trump's policies and the introduction of import tariffs. pic.twitter.com/frBwvSxUWE
— NEXTA (@nexta_tv) April 5, 2025
இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிவில் உரிமைகள் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், LGBTQ ஆதரவாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்தத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த மக்கள் இயக்கத்திற்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
நியூயார்க் நகரின் மேன்ஹேட்டன் மற்றும் பாஸ்டன் போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான போராட்டங்களில், அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு குறைப்பு நடவடிக்கைகள், கடுமையான குடியேற்றக் கொள்கைகள், நாட்டின் மோசமான பொருளாதாரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீறல் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராக ஆவேசமான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது அரசியல் காரணம் இல்லை
வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு முக்கிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களிடம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
நாம் தற்போது சந்திக்கும் இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும் நிகழ்பவை அல்ல. என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |