லண்டனில் முறைகேடாக சொத்து! ஊழல் வழக்கில் விடுதலை..கடவுளுக்கு நன்றி கூறிய முன்னாள் பிரதமர்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் (73) அவென்ஃபீல்டு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவென்ஃபீல்டு ஊழல்
2018ஆம் ஆண்டு அவென்ஃபீல்டு (Avenfield) ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டனில் முறைகேடாக சம்பாதித்த பணத்துடன் சொத்துக்களை வைத்திருந்ததால் அவருக்கு இந்த வழக்கில் தண்டனை கிடைத்தது.
ஆனால், ஜாமீனில் வெளியே வந்த அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஷெரீஃப்பின் மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷெரீஃப்பை விடுவித்துள்ளது.
PTI
கடவுள் வெற்றிபெற செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷெரீஃப், 'நான் முழு விடயங்களையும் கடவுளிடம் விட்டுவிட்டதால் அவருக்கு நன்றி கூறுகிறேன். கடவுள் இன்று எங்களை வெற்றிபெற செய்துள்ளார்' என தெரிவித்தார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டில் பனாமா ஆவண முறைகேடு தொடர்பில் நவாஸ் ஷெரீஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |